பிரபுதேவாவும், நயன்தாராவும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்துள்ளனர். நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒப்பந்தமாகி ஐதராபாத்துக்கும் கோடம்பாக்கத்துக்குமாய் போய் வந்து கொண்டு இருக்கிறார்.
பிரபுதேவா மும்பையில் தங்கி 'ரவுடி ரத்தோர்' படத்தை டைரக்டு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் சோனாக்சி சின்கா. பெங்களூர் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியை காண பிரபுதேவாவும் சோனாக்சி சின்காவும் ஜோடியாக வந்தனர்.
இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோரது கண்களும் அவர்களையே மொய்த்தன. எதிர்பாராதவிதமாக மழை பெய்து போட்டியை நடக்க விடாமல் செய்தது. இதனால் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். மும்பை திரையுலகில் இவர்களின் நெருக்கம் பற்றி கிசுகிசு பரவியுள்ளது.
சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடக்க விழாவில் பிரபுதேவா நடனம் ஆடி வீரர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை நட்சத்திர ஓட்டல்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சியிலும் பிரபுதேவா பங்கேற்றார். இந்த பிரபலமே சோனாக்சியை பிரபுதேவாவுடன் நெருங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment