தந்தையும், மகனும் ஒரு 'கம்பெனி'யை, ஒரு துறையை எப்படி நிர்வகிப்பார்களோ அதுபோல் நானும், நித்தியானந்தாவும் இணைந்து தந்தை, மகன் போல் மதுரை ஆதீனத்தை நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
மதுரை ஆதீனத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மதுரை ஆதீனம் பேசுகையில்,
இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் இந்த மடத்தின் நிர்வாகத்துக்குள் இருந்தது. பின்னர் அரசு எடுத்து கொண்டது.
மதுரை ஆதீனம் 293-வது குரு சன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது திடீர் என எடுத்து முடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக புதியவரை நியமிக்க யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்த அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள். சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர் குணம் போன்ற தகுதியடையவனாக இருக்கிறேன். இப்போது 293-வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்து எடுத்ததற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சிவன்- பார்வதி ஆசியுடன் நித்தியானந்த சுவாமியை நியமித்து சம்பிரதாயபடி ஏற்று உள்ளோம். இவர் எழுச்சிமிக்கவர், ஆற்றல் மிக்கவர். நானும் அவரும் இணைந்து நிர்வாகத்தை நடத்துவோம்.
தந்தையும், மகனும் ஒரு கம்பெனியை, ஒரு துறையை எப்படி நிர்வகிப்பார்களோ அதுபோல் இருவரும் இணைந்து தந்தை, மகன் போல் நடத்துவோம். இவர் இங்கு அடிக்கடி வருவார் என்றார் மதுரை ஆதீனம்.
No comments:
Post a Comment