நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மேல் சபை எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து யோகா குரு ராம்தேவ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்டோர் மேல் சபை எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சச்சினை மேல் சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மூழ்கும் நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை, தாங்கி நிலை நிறுத்தவே இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. சச்சினுக்கு பதவி கொடுப்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள்.
அதே போல் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவும் இந்திய மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட அரசியல் தரப்பில் எதிர்ப்புகள் வருவதால், அவருக்கு மேல் சபை எம்.பி. பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் அரசியலே. சச்சினை கட்சியில் சேர்க்க நடக்கும் முயற்சியே இது.
இந்த பதவியை ஏற்க அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டாயப் படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இதற்கு பதிலளிப்பது சச்சினின் கையில்தான் உள்ளது. மேல் சபையில் அமைதியாக இருக்கப் போகிறாரா அல்லது ஊழலுக்கும் கருப்பு பணத்துக்கும் எதிராக குரல் கொடுக்கப் போகிறாரா என்று சச்சின்தான் பதிலளிக்க வேண்டும்.
பல சதங்களையும் சிக்சர்களையும் அடித்துள்ள அவருக்கு இது குறித்து தெளிவான முடிவெடுக்க எல்லா உரிமையும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Veanam thala mp pathavi veantam...
ReplyDelete