2 ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவை, சந்திப்பதில் தவறு இல்லை என்றும், கட்சிக்காரர் என்ற வகையில் ராஜாவை தான் சந்தித்து வருவதாகவும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். ஆனால் புதுக்கோட்டை இடைத் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்க அழகிரி மறுத்துவிட்டார்.
மேலும் திமுகவில் அழகிரி ஆள், ஸ்டாலின் ஆள் என்று யாரும் இல்லை, அனைவருமே கருணாநிதியின் ஆட்கள்தான் என்றும் அழகிரி தெரிவித்தார்.
ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத அழகிரி ஆதரவாளர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேட்டபோது, திமுகவில் நிர்வாகிகள் நீக்கம் என்பது சாதாரணமானதுதான் என்றும் இங்கு அழகிரியின் ஆட்கள், ஸ்டாலின் ஆட்கள் என்று யாரும் கிடையாது. எல்லோருமே கருணாநிதியின் ஆட்கள்தான் எனவும் அழகிரி பதிலளித்தார்.
No comments:
Post a Comment