ஒடிசா மாநில பிஜு ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். இவரை விடுவிக்க வேண்டுமானால் சிறையில் இருக்கும் 29 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இவர்களில் 25 பேரை விடுவிக்க மாநில அரசு சம்மதித்தது. மீதம் உள்ள 4 பேரை விடுவிக்க எதிர்ப்பு கிளம்பியதால் கடத்தல் நாடகம் முடிவுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே எம்.எல்.ஏ. கடத்தப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் ஆனதால் அவரை மேலும் பணைய கைதியாக வைத்திருக்க மாவோயிஸ்டுகள் விரும்ப வில்லை. இதனால் அவரை மக்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி முடிவு செய்யப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்தனர். அதன்படி மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் உள்ள கிராம நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை ஆஜர்படுத்தினர்.
அப்போது அவர் அரசும், தனது கட்சி பிரதிநிதிகளும் தன்னை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறை கூறினார். தொடர்ந்து மக்களுக்கு பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
இதையடுத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும், பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்தும் விலக வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர். இதை ஹிகாகா எம்.எல்.ஏ. ஏற்றுக் கொண்டார். இதை அவர் உறுதி மொழியாக எழுதிக் கொடுத்தார். அதன் பிறகு அவரை விடுதலை செய்வதாக மக்கள் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த தகவல் மாவோயிஸ்டுகளின் வக்கீல் நிகர்ரஞ்சன் பட்நாயக் மூலம் அரசுக்கும், எம்.எல்.ஏ. குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு அரசிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே காலை 10 மணிக்கு முன்னரே எம்.எல்.ஏ. விடுதலை செய்யப்பட்டார்.
காட்டுப் பகுதியில் தங்கள் பிடியில் இருந்த எம்.எல்.ஏ.வை அதிகாலையில் மாவோயிஸ்டுகள் கோரபுட் மாவட்டத்தில் நாராயண்பட்டினம் கிராமத்துக்கு அழைத்து வந்து கிராம மக்களிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து கிராம மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் எம்.எல்.ஏ.வை அவரது சொந்த கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் முதல்- மந்திரி நவீன் பட்நாயக் முன்னிலையில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார். இதன் மூலம் கடந்த ஒரு மாதமாக ஒடிசாவில் நிலவி வந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது.

No comments:
Post a Comment