வலுவான லோக்பால் மசோதாவை வலியுறித்தி மும்பையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார். முன்னதாக, மகாராஷ்டிரா முதல்வர் பிரிதிவிராஜ் சவுகான் மற்றும் மகராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோரை சந்தித்து இது குறித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், சிவ சேனா தலைவர் பால் தாக்கரே, அன்னா ஹசாரே வை சந்திக்க மறுப்பு தெரிவித்தார். இது குறித்து அன்னா ஹசாரே கூறும்போது தன் சுயநலத்திற்காக லோக்பால் மசோதாவை கோரவில்லை எனவும், நாட்டின் நலத்திற்காகவே தான் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோருவதாகவும், தன்னை அவர் சந்திக்கவில்லை என்றால் தன்னை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை என தெரிவித்தார்.
இப்பிரச்சினை குறித்து பால் தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே கூறும்போது, அன்னா ஹசாரே வை ஊழல்வாதிகள் ஆதரிப்பதாகவும், அவர்கள் அவரை ஆதரிக்கும் வரை சிவ சேனா கட்சி அன்னா ஹசாரே உடன் எந்த தொடர்பும் வைக்கப்போவதில்லை எனவும் சிவ சேனா கட்சியின் தலைவர் அவரை சந்திக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment