தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு. கழகத்தின் நிலைப்பாடு என்ன?
பதில்:- வேட்புமனு தாக்கல் அடுத்த மாதம் (மே) 18-ந் தேதி தான் தொடங்குகிறது. எங்கள் நிலையை வருகிற 17-ந் தேதி அறிவிக்கிறோம்.
கேள்வி:- புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இன்று நடத்தை விதிகளைத் தளர்த்தியிருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் முறையாக செயல்படும் என்று நம்புகிறீர்களா?
பதில்:- தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவேண்டும். ஆனால் நடுநிலையோடு தேர்தல் கமிஷன் செயல்படுமா என்பது கடந்த கால நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது எனக்கு நம்பிக்கை இல்லை.
கேள்வி:- இலங்கை தமிழர்களுக்காக ``டெசோ'' அமைப்பினை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக சொல்லியிருந்தீர்கள். ஒரு சிலர் அதற்கு எதிர்ப்பாக பேசுகிறார்களே?
பதில்:- நான் தமிழர்களுக்காக சொன்னேன். அதைப் பிடிக்காதவர்கள் அதற்கு மாறாக சொல்லியிருக்கலாம்.
கேள்வி:- கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரை மாநிலங்கள் அவை உறுப்பினராக நியமனம் செய்திருப்பது பற்றி?
பதில்:- வரவேற்கிறேன்.
கேள்வி:- டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்களே?
பதில்:- செய்தி பார்த்தேன். அதைப்பற்றிய விவரம் எனக்கு தெரியாது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
No comments:
Post a Comment