குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடுவேன் என்று ஊகிக்க வேண்டாமென நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரி அல்லது பிரணாப் முகர்ஜி இருவரும் போட்டியிடக் கூடும் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. பிரணாப் போட்டியிட்டால் அவரை திமுக ஆதரிக்கும் என்று சென்னை வந்திருந்த ஏ.கே. அந்தோணியிடம் கருணாநிதி கூறியதாகவு சொல்லப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக ஊகித்துக் கொள்ள வேண்டாம் என்றார். மேலும் யார் வேட்பாளர் என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் இறுதி முடிவெடுப்பார் என்றும் பிரணாப் கூறியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், சபாநாயகர் மீரா குமார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் என பலரது பெயரும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
No comments:
Post a Comment