காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் நெருங்கிய உறவினர் இத்தாலி நாட்டை சேர்ந்த ஒட்டாவியோ கோட்ராச்சி போபோர்ஸ் ஊழலில் முக்கிய இடம் பெற்றுள்ளபோது, சோனியாவின் பெயர் இடம் பெறாதது வியப்பளிப்பதாக ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அதிகாரபூர்வ பத்திரிக்கையில் 'மிஸ்ஸிங் நேம்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில் இதனை தெரிவித்துள்ளது. அதில் ஒட்டாவியோ கோட்ராச்சியை காந்தி குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைத்த சோனியாவின் பெயர் இவ் ஊழல் வழக்கில் இடம் இடம்பெறவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. இது ஆச்சர்யமாக இருப்பதாகவும், ஹாரி பாட்டர் தொடரில் வரும் மர்மம் போன்று இவரது பெயரும் இடம் பெறாமல் இருப்பதாகவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஆட்சி செய்த மற்ற அரசுகளும் உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. இதில் நேரடியாக என்.டி.ஏ.அரசை குறிப்பிடாவிட்டாலும் 1998-2004 ம் ஆண்டு வரை ஆட்சி செய்ததில் என்.டி.ஏ. வும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் குறிப்பாக வி.பி. சிங் தலைமயிலான அரசு பதவிக்கு வந்த 100 நாட்களில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிருத்துவோம் என்று கூறினர். ஆனால் எதுவும் செய்யவில்லை எனவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கிறார்கள். ஆனால் தான் ஆட்சிக்கு வந்ததும் அதை மறந்து விடுகிறார்கள் எனவும் அதில் குற்றம் சாட்டியுள்ளது.
No comments:
Post a Comment