நடிகரும், இயக்குநருமான பிரபுதேவாவுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனால் பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.
இப்போது பிரபுதேவா மும்பையில் வசித்து வருகிறார். நயன்தாராவும் அவருடன் இருந்து வருகிறார்.
விசால் நடித்து பிரபுதேவா டைரக்ட் செய்த வெடி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக பிரபுதேவா (03.09.2011) இரவு சென்னைக்கு வந்தார்.
அப்போது பிரபுதேவாவிடம், உங்களுக்கும் நயன்தாராவுக்கும் வருகிற 16ந் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக பேசப்படுகிறதே, அது உண்மையா?' என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பிரபுதேவா, இது வெடி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு. என்னுடைய தனிப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்'' என்று கூறினார்.
No comments:
Post a Comment