காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் நேற்று நள்ளிரவில் திடீரென 20க்கும் மேற்பட்டோர் ஆட்டோக்களில் வந்து பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியுள்ளனர். இதில் இரு கார்கள் சேதமடைந்தன.
எஸ்.வி.சேகர் வீட்டில் இதற்கு முன்பும் தாக்குதல்கள் நடந்துள்ளன. முன்பு ஒருமுறை காங்கிரஸ் உட்கட்சிப் பூசல் காரணமாக காங்கிரஸைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடந்துள்ளது.
பைக்குகள், ஆட்டோக்களில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டோர் வந்ததாகவும், பெட்ரோல் குணடுகளை வீசித் தாக்கியதாகவும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் வீட்டுக்கு முன்பு நிறுத்ததப்பட்டிருந்த 2 கார்கள் சேதமடைந்துள்ளதாகவும் சேகர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment