2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக புலனாய்வு (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தி தனது அறிக்கையே உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.
அதன் நிலை அறிக்கையில், ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் தயாநிதி மாறன் வற்புறுத்தல் இருப்பதாக இன்னும் தெரியவில்லை என சிபிஐ கூறியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் 3 வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ. தகவல் தெரிவித்து உள்ளது.
லூப் டெலிகாம் நிறுவனம் எஸ்ஸார் நிறுவனத்தின் ஓர் அங்கம்தான் என்றும் இரு நிறுவனங்களும் மோசடி செய்திருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அருண் ஷோரியின் பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட உரிமங்கள் குறித்து ஆய்வுசெய்யப்பட வேண்டும் என்றும் அப்போதைய நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சி.பி.ஐ. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ரூ. 10 ஆயிரம் கோடி சொத்துகளை முடக்க அமலாக்கப்பிரிவு துறையினர் முடிவு செய்து உள்ளனர். இதுவரை ரூ.223 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கப்பிரிவு தகவல் தெரிவித்து உள்ளது.
மேலும் இது குறித்த விசாரணையே முடிக்க 15 நாட்கள் வேண்டும் என சி.பி.ஐ. கூறியுள்ளது.
No comments:
Post a Comment