சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி விஷமிகள் யாராவது போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார்கள்.
நேற்று மாலை 3.12 மணியளவில் இந்த அலுவலகத்துக்கு சிறுவன் குரலில் மர்ம நபர் ஒருவர் பேசினார். ``ஜெயலலிதா அம்மாவுக்கும், அவரது அலுவலகத்துக்கும், டைம் செட் பண்ணியாச்சி. சொல்வதை சொல்லிவிட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று பேசி விட்டு அந்த மர்ம நபர் போனை வைத்து விட்டார்.
இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் உஷார்படுத்தப்பட்டனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு பிறகு வெறும் மிரட்டல் தகவல் என்று தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து போனில் பேசி மிரட்டிய நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். போனில் பேசிய நபர் கடலூரில் இருந்து பேசி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment