லோக்சபாவில் படு சூடாக விவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் குறட்டை விட்டுத் தூங்கினார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ். லாலுஜி எழுந்திருங்க என்று கூறி அவரை எழுப்ப முயன்று தோல்வி அடைந்த சபாநாயகர் மீராகுமார், அருகில் இருந்த உறுப்பினரை அழைத்து லாலுவை எழுப்பச் சொன்னார்.
இன்றுதான் இந்தக் கூத்து நடந்தது. முதல் வரிசையில் சபாநாயகருக்கு எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார் லாலு. அப்போது அவையில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. படு சூடான விவாதத்திற்கு மத்தியில் சைலன்ட்டாக குட்டித் தூக்கத்திற்குப் போய் விட்டார் லாலு. இதைப் பார்த்த சபாநாயகர் மீரா குமார், லாலுவை எழுந்திருக்குமாறு கூறினார். ஆனால் லாலு காதுகளை அது அடையவில்லை. அப்படி ஒருதூக்கத்தி்ல இருந்தார் தலைவர். இதைப் பார்த்த மீரா குமார் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த அவரது கட்சி எம்.பி. உமாசங்கர் சிங்கை அழைத்து, உங்கள் தலைவரை எழுப்புங்கள் என்றார்.
இதையடுத்து உமாசங்கரும், லாலுவின் தோளைத் தட்டி எழுப்பினார்.சடாரென விழித்துப் பார்த்த லாலு, தான் கையும் களவுமாக பிடிபட்டதை உணர்ந்து வெட்கச் சிரிப்புடன் நெளிந்தார்.

No comments:
Post a Comment