வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தே.மு.தி.க. தொழிற்சங்கம் சார்பில் கொடிஏற்று விழா இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அங்கு கொடிகம்பம் அமைக்கும் பணியில் தே.மு.தி.க. தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், நகர செயலாளர் சண்முகம், தே.மு.தி.க. ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், நடராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் அங்கு வந்தனர்.
அப்போது அங்கு ராஜீவ்காந்தி ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் முனியப்பன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் திரண்டு வந்தனர். இங்கு தே.மு.தி.க. தொழிற்சங்க கொடி ஏற்ற கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையொட்டி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அங்கு இருந்த தே.மு.தி.க. தொழிற்சங்க பேனர் கிழிக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்தார், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
தே.மு.தி.க. தொழிற்சங்கத்தினர்- காங்கிரசார் இடையே ஏற்பட்ட மோதலை யொட்டி பஸ்நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் வேலூர் டி.எஸ்.பி. சுந்தரேசன் முன்னிலையில் இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
No comments:
Post a Comment