சூரனை வதம் செய்த சுப்பிரமணிய சாமி கோவிலால் குடிகொண்டிருக்கும் நகரம் தூத்துக்குடி மாட்டத்தில் உள்ள திருச்செந்தூர். இந்த நகரத்தை பாலியல் தொழில் கும்பல்கள் சீரழித்து வருகின்றன.
இங்கே உள்ள பேருந்து நிலையத்தின் அருகில் சரவணபொய்கை துணை சுகாதார நிலைய கட்டிடம் ஒன்று உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அது பராமரிப்பு இல்லாமல், பாழடைந்த நிலையில் உள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்ட சமூக விரோத கும்பல்கள், தங்களின் விளையாட்டுக்களை அரங்கேற்றி வருகின்றன.
பட்டப்பகலிலேயே ஹோமோ செக்ஸ் வெறியர்களின் லூட்டிகள் தாராளமாகவே நடக்கின்றன. மேலும், இந்த கும்பல்கள் பேருந்து நிலையத்துக்குள்ளேயே சுற்றித் திரிவதால், பயணிகள் கடும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
பட்டப்பகலில் ஓரின சேர்க்கை வெறியர்களின் தொல்லை என்றால், இரவில் பெண்களோடு வரும் சதை வெறியர்கள் சிக்கன், மது போன்ற வேட்டை நடத்திவிட்டு அழைத்து வரும் பெண்களோடு உல்லாசமாக இரவை கழிக்கின்றனர்.
இதுபோன்று பகலிலும், இரவிலும் இப்படிப்பட்ட பாலியல் வெறி கும்பலின் தொல்லைகள் தொடருவதால், பேருந்து நிலையத்தில் தங்கி வெளியூர் செல்லும் பயணிகள் குறிப்பாக பெண் பயணிகள் பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றனர்.
போலீஸ் பயம் கொஞ்சம் கூட இல்லாமல் இங்கே கொடி கட்டி பறக்கும், இந்த கும்பலின் தொழில் பற்றியும், சமூக விரோத செயல்களுக்கும் போக்குவரத்துக்கும் இந்த கட்டிடம் இடையூறாக இருப்பதால், இந்தக் கட்டிடடத்தை இடித்துவிடும் படி பொதுமக்கள் உள்பட அரசியல் அமைப்புகள் மாவட்ட ஆட்சியருக்கும், மருத்துவ துறைக்கும் கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே மருத்துவ துறையில் இருந்து திருச்செந்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தமிழ்ச் செல்வனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், சரவணபொய்கை துணை சுகாதார நிலைய கட்டிடத்தில் செவிலியர்கள் தங்கி சுகாதாரப் பணிகளை செய்து வருவதாக, அதில் கூறப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ந்த ஒன்றியச் செயலாளர் தமிழ் செல்வன், உண்மைக்கு மாறான தகவல் என்றதோடு, 25 ஆண்டுகாலமாக செயல்படாமல் இருக்கும் இந்த கட்டிடம், சமூக விரோத செயல்களுக்கு கூடாரமாக ஆகிவிட்டது. இதுசம்மந்தமாக அரசு தொடர்பான பல்வேறு துறைகளுக்கும், மருத்துவ துறைக்கும் நாங்கள் புகார் அனுப்பியுள்ளோம் என்றார்.
உடனே, இந்தக் கட்டிடத்தை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment