பாராளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் இன்று காலை 11 மணிக்கு 18 திமுக எம்.பிக்கள் டெல்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்திக்கின்றனர்.
அப்போது, ’’அதிமுக அரசு தொடர்ந்து அராஜக வழியில் செல்கிறது. திமுகவை பழிவாங்கும் நோக்கத்துடன் சித்திரவதைகள் மற்றும் குண்டாஸ் சட்டங்களை ஏவி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.
அதிமுக அரசின் இந்த அராஜக போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும்’’ என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
அதிமுக மீது ஜனாதிபதியிடம் முதல் முறையாக திமுக புகார் மனு கொடுப்பதால் ஜனாதிபதியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment