என் மகளிடம் சினிமாத் தொழிலே வேண்டாம் என்று சொன்னேன்; அவள் கேட்கவில்லை என்று இளம் நடிகையின் தாயாரும், மாஜி நடிகையுமான சுமித்ரா கூறியுள்ளார். ஏற்கனவே முதல் மகள் உமா சினிமாவில் அறிமுகமாகிவிட்ட நிலையில், டூ படம் மூலம் இரண்டாவது மகள் நட்சத்திராவும் திரையுலகில் நுழைந்திருக்கிறார்.
இதுபற்றி சுமித்ரா அளித்துள்ள பேட்டியில், என் மகள்கள் நடிப்பதில் எனக்கு பெரிய அளவில் விருப்பமேயில்லை. நாம்தான் இரவு பகலாக ஷூட்டிங், அலைச்சல் காரணமாக சரியாக சாப்பிடாமல், நேரத்துக்குப் படுக்க முடியாமல் சிரமப்பட்டோம். நமது பிள்ளைகளாவது அந்தச் சிரமத்துக்கு ஆளாக வேண்டாமே என்ற எண்ணம்தான் காரணம். ஆனால் விதியை மாற்ற முடியுமா? மூத்த மகள் உமாவும் நடிகையாகி விட்டாள். இப்போது இளைய மகள் நட்சத்திராவும் "டூ படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். உமா அமைதியான சுபாவம் என்றால் நட்சத்திரா அவளுக்கு நேர் மாறானவள். இப்போது பயோ டெக் படிக்கிறாள்.
சினிமா வேண்டாமே என்று சொல்லிப் பார்த்தாலும் கேட்கவில்லை. சரி, அவளுக்குப் பிடித்த துறையில் ஈடுபடட்டும் என சம்மதித்தேன். "டூ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன. அவளுக்கு ஜாலியான கேரக்டர்களில் நடிக்கத்தான் ஆசை. நான் நடித்த படங்களில் அழுகை காட்சிகள் வந்தால் அதை பார்க்கவே மாட்டாள், என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment