கமல் நடித்து இயக்கும் விஸ்வரூபம் படத்தின் ஹீரோயின் விஷயத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இப்போது கமல் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அனுஷ்காவும் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்புக்கு இருவரும் ஜோர்டன் செல்லப்போவதாக கூறப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியாகியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக சத்ருகன் சின்ஹா மகள் சோனாக்ஷி ஒப்பந்தமானார். படத்தை துவங்குவதில் ஏற்பட்ட அசாசாரண காலதாமதம் மற்றும் இயக்குநர் செல்வராகவன் மாற்றப்பட்டது போன்றவற்றால், படத்திலிருந்தே விலகிக் கொண்டார் சோனாக்ஷி.
இதன் பிறகுதான் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்திருந்தனர்.
ஆனால் இப்போது, அனுஷ்கா தனது கால்ஷீட்டை செல்வராகவன் படத்துக்கு கொடுத்துவிட்டதால், கமல் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளாராம்.
அனுஷ்காவுக்கு பதில் சமீரா ரெட்டி கமல் ஜோடியாக நடிப்பார் எனத் தெரிகிறது.

No comments:
Post a Comment