அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதம் குறித்த சினிமா படம் மராத்தியில் இப்போது தயாராகிறது. ஆனால் இந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் கடந்த ஆண்டே தயாராகிவிட்டதாக அதை எழுதிய கணேஷ் ஷின்டே கூறியுள்ளார்.
மராத்தியில் தயாராகும் இந்தப் படத்துக்கு "மாலா அன்னா ஹாய்காய்" (அன்னா ஹசாரேவாக விரும்புகிறேன்) என பெயரிடப்பட்டுள்ளது. மராத்தி நடிகர் அருண் நலவதே அன்னா ஹசாரே வேடத்தில் நடிக்கிறார். மற்ற பாத்திரங்களிலும் மராத்தி நடிகர்களே நடிக்கிறார்கள்.
இதுகுறித்து படத்தின் எழுதாத்தாளர் கணேஷ் ஷிண்டே கூறுகையில், "அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதற்கு முன் கடந்த ஆண்டே கதை தயாராகி விட்டது. அன்னா ஹஸாரே அனுமதியுடன் அவர் உண்ணாவிரதம் இருக்கும் காட்சிகள், மக்கள் எழுச்சி ஆகியவை படத்தில் சேர்க்கப்படும். அவரை கைது செய்தது, சிறையில் அடைத்தது, ஆர்ப்பாட்டம் போன்றவற்றை கதையில் சேர்த்து இருக்கிறேன்," என்றார்.
அப்படியெனில் இந்தப் போராட்டம் ஓராண்டுக்கு முன்பே திட்டமிடப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மிகக் குறைந்த பட்ஜெட்டில் ரூ.60 லட்சம் செலவில் தயாராகும் இந்தப் படம் நவம்பர் மாதம் 13-ந்தேதி மராட்டிய மாநிலம் முழுவதும் திரைக்கு வருகிறது.

No comments:
Post a Comment