தொலை தொடர்புத் துறை முன்னாள் செலாளர் சித்தார்த் பெகுரா அரசின் கொள்கையைத் தான் அமல்படுத்தினார். அவருக்கும் 2ஜி ஊழலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அவரது வழக்கறிஞர் அமன் லெஜி தெரிவித்தார்.
2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை முன்னாள் மத்தியமைச்சர் ஆ. ராசா ஆஜராகி வாதாடினார்.
அவர் வாதாடுகையில் டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தான் ஒப்புதல் அளித்தார். பிரதமரின் முன்னிலையில்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்று ப. சிதம்பரத்தையும், பிரதமரையும் இதில் இழுத்தார்.
இன்று தொலை தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா சார்பில் அவரது வழக்கறிஞர் அமன் லெஜி ஆஜராகி வாதாடினார்.
அவர் வாதாடுகையில்,
சித்தார்த் பெகுரா மத்திய அரசு ஊழியராக இருந்தவர். அவர் தனது பதவிக்காலத்தில் மத்திய அரசின் கொள்கைகளைத் தான் அமல்படுத்தினார். அவர் எந்த தவறும் செய்யவில்லை. அவருக்கும் 2ஜி ஊழலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அவர் ஊழல் செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
அரசின் கொள்கையை அமல்படுத்தியதில் தவறு சொல்ல முடியாது. மேலும், இந்த கொள்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் இருப்பதால் அவர் ஒரு நிரபராதி என்றார்.

No comments:
Post a Comment