கடந்த பல வாரங்களுக்கு முன்பே நாம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். இயக்குனர் கவுதமுக்கு நடிகர் விஜய் விருந்தளித்தார் என்பதுதான் அந்த செய்தி. காக்க காக்க படத்திலேயே விஜய் நடித்திருக்க வேண்டும். முருகதாசின் கஜினி படத்தின் கதையும் முதலில் விஜய்யிடம்தான் சொல்லப்பட்டது. அந்த வாய்ப்புகளை தவறவிட்ட விஜய் தற்போது அதையெல்லாம் சரி செய்யும் விதத்தில் இருவரையும் தனித்தனியாக அழைத்து விருந்து கொடுத்ததாக அப்போது தெரிவித்திருந்தோம். விரைவில் இருவரது படங்களிலும் விஜய் நடிக்கப் போவதை பற்றியும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். நமது செய்தியை உறுதிப்படுத்தும் விதத்தில் கவுதம் மேனன்- விஜய் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. படத்துக்கு யோஹன்-அத்தியாயம் ஒன்று என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் கவுதம் மேனனின் சொந்த நிறுவனமான போட்டோன் கதாஸ் புரடக்ஷன் கம்பெனியே தயாரிக்கிறது. அடுத்ததாக முருகதாஸ் பட அறிவிப்பும் வெளிவர இருக்கிறது.
No comments:
Post a Comment