மத்திய அமைச்சரும், தென் மண்டல திமுக செயலாளருமான முக அழகிரி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை அவரது இல்லத்தில் சந்தி்த்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் திமுக வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு புகாரில் சிக்கி தலைமறைவாகி பின்பு சரண் அடைந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் மத்திய அமைச்சர் முக அழகிரி இன்று சேலம் சென்று வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு அவர் வீரபாண்டி ஆறுமுகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மு.க.ஸ்டாலினை செயல் தலைவராக்க அவரது தரப்பு துடித்துக் கொண்டிருக்கிறது. அதை கடுமையாக எதிர்த்து வருகிறது அழகிரி தரப்பு. இவர்களுக்கு இடையே சிக்கி கருணாநிதி திண்டாடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் திமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவரான வீரபாண்டியாரை அழகிரி சந்தித்துப் பேசியது பல்வேறு எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.

No comments:
Post a Comment