சேலத்தை சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தரிடம் பண மோசடி செய்யப்பட்ட வழக்கில் சன் டி.வி. நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் இன்று சென்னை கே.கே. நகர் காவல் நிலயைத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது.
பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய புகார்கள் குறித்து விசாரணை நடத்த வேணடியிருப்பதால் கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு வருமாறு கலாநிதி மாறனுக்கு கே.கே.நகர் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் தேவை என்று கலாநிதி மாறன் கோரியிருந்தார். அதை போலீஸார் ஏற்று இன்று வரை அவகாசம் தந்துள்ளனர்.
சேலத்தை சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் டி.கே. செல்வராஜ். "தீராத விளையாட்டு பிள்ளை' திரைப்பட வினியோகம் தொடர்பாக ரூ. 82.53 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது கடந்த ஜூலை 3ம் தேதி கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக, சன் டி.வி. நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறனையும் விசாரிக்கும் வகையில் அவருக்கு போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பினர். அதில், ஜூலை 13ம் தேதி கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் அவர் போலீஸில் ஆஜராகவில்லை.
அவரது சார்பில் காவல் நிலையத்துக்கு வந்த வழக்கறிஞர்கள் கலாநிதி மாறன் காவல் நிலையத்தில் ஆஜராக ஜூலை 25ம் தேதி வரை அவகாசம் கேட்டனர். அந்த அவகாசம் தரப்பட்டது.
இந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. எனவே, அவர் இன்று மாலைக்குள் கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஆஜராகலாம் என்று தெரிகிறது. அவர் ஆஜாராகாவிட்டால் மீண்டு்ம் அவருக்கு புதிய சம்மன் அனுப்பவும் போலீசார் திட்டமிட்டுள்ளார்.
கலாநிதி மாறனிடம் விசாரணை நடத்தி, அவர் மீதும் வழக்குத் தொடர்ந்து, அவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளில் அரசு இறங்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment