காமன்வெல்த் ஊழல் வழக்கில் திகார் சிறையில் இருக்கும் சுரேஷ் கல்மாடி டிமென்ஷியா என்னும் ஞாபகமறதி நோயால் அவதிப்படுகிறார் என்று அன்மையில் செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்றும், தான் நலமாக இருப்பதாகவும் கல்மாடி கூறியுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருந்த கல்மாடி ஊழல் புகாரில் சிக்கி தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில் கல்மாடியை லோக் நாராயண் தெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் உள்பட பல பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் அவரது குடும்பத்தினர் கல்மாடிக்கு டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி நோய் இருப்பதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இது குறித்து அவரது வழக்கறிஞர் ஹித்தேஷ் ஜெயின் கூறுகையில், எனது கட்சிக்காரருக்கு கடந்த 4, 5 ஆண்டுகளாக டிமென்ஷியா பிரச்சனை உள்ளது. இது குறித்து சிறை மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டோம் என்றார்.
அவருக்கு இன்று மூளையில் ஸ்கேன் செய்து பரிசோதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சிபிஐ கோர்ட் வளாகத்தில் சந்தித்த கல்மாடி கூறுகையில்,
எனக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாக அன்மையில் செய்திள் வந்தன. அதில் உண்மையில்லை. எனக்கு எந்த ஞாபக மறதியும் கிடையாது. எனக்கு நல்ல ஞாபக சக்தி உள்ளது. நான் நலமாக இருக்கிறேன் என்றார்.
சமீபத்தில் திஹார் சிறையில் நீதிபதி அதிரடி சோதனை நடத்தியபோது, சிறைக் கண்காணிப்பாளருடன் சரிக்குச் சமமாக உட்கார்ந்து, டீ, பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கல்மாடி என்பது நினைவிருக்கலாம். வழக்கிலிருந்து தப்ப டிமென்ஷியா, அது இது என்று கஜினி வேலைகளில் கல்மாடி தரப்பு ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனக்கு ஞாபக மறதி இருக்கா இல்லியான்னு மறந்து போச்சுங்க...
ReplyDelete