திமுக கூட்டணியில் இருந்து வெளியேற இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பாமக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் அதன் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய பலரும் திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்தினர். இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்து வெளியேறவும், தமிழ் மக்களின் நலன் காக்க உள்ளாட்சித் தேர்தலில் மாற்று அணி அமைத்து போட்டியிடவும் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment