அடுத்த ஆண்டு நான் இயக்கும் படத்தில் எனது இளைய மகன் குறளரசன் கதாநாயகனாக நடிக்கிறார் என்று விஜய டி.ராஜேந்தர் கூறினார்.
நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்கு திரைப்பட இயக்குனரும், லட்சிய தி.மு.க. தலைவருமான விஜய டி. ராஜேந்தர் வந்தார். திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நான் இயக்கி கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு தலைக்காதல்' சினிமா படப்பிடிப்பு நடத்த கொல்லிமலை முதல் இமயமலை வரை சென்று வந்தேன். இமயமலை சென்ற போது திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்ள நினைத்தேன். அதற்கு முன்பாக எங்கள் திருக்கயிலாய பரம்பரை, எங்கள் மண்ணின் குரு திருவாவடுதுறை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற வந்தேன். ஒரு தலைக்காதல் படம் கோடிகளை நம்பி எடுக்கும் படம் அல்ல. காதலில் தோற்ற தாடிகளை நம்பி எடுக்கும் படம். இந்த படம் வெளிப்புற படப்பிடிப்பில் தான் உருவாக போகிறது.
எனது மகள் இலக்கியாவுக்கு திருமணம் நடத்த முடிவு செய்து ஜாதக பொருத்தமுள்ள மணமகனை தேடி வருகிறேன். இலக்கியா திருமணம் முடிந்தவுடன் மூத்த மகன் நடிகர் சிலம்பரசனுக்கு திருமணம் நடைபெறும். அடுத்த ஆண்டு நான் இயக்க உள்ள படத்தில் எனது இளைய மகன் குறளரசனை கதாநாயகனாக அறிமுகப்படுத்த உள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment