பாகிஸ்தானின் புதிய வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஹினா ரப்பானி இன்று இந்தியா வந்தார்.
34 வயதே ஆன பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சரான ஹினா, டெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந் நிலையில் தனி நாடு கோரும் காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர்களை டெல்லியில் வைத்து ஹினா சந்திக்கவுள்ளார். இதற்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு அமைதியின் முக்கியத்துவத்தை முதலில் பாகிஸ்தான் போதிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
இந் நிலையில் இன்று இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை டெல்லியில் நடந்தது.

No comments:
Post a Comment