திருச்சி மதுரை நான்கு வழிச்சாலை அருகே உள்ள பஞ்சப்பூர் என்ற இடத்தில் 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் டப்பாவில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மாதங்கள் கொண்ட சிசுக்கள் கிடந்துள்ளன.
இவற்றை அந்த பகுதியில் உள்ள மக்கள் பார்த்துள்ளனர். அதிக வாடை வந்ததால், பொதுமக்கள் என்னவென்று ஆராயும் போது இந்த அதிர்ச்சியான விஷயம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து, 50க்கும் மேற்பட்ட சிசுக்கள் கொண்ட டப்பாக்களை குழி தோண்டி புதைத்துள்ளர்.
பின்னர் இந்த தகவல் திருச்சி மாவட்ட எஸ்.பி., லலிதா மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் கவனத்துக்கு சென்றது.
இதையடுத்து சிசுக்கள் உள்ள டப்பாக்கள் எப்படி வந்தது என்று விசாரணைக்கு உத்தரவிட்டனர். எடமலைப்பட்டி புதூர் காவல்நிலைய எஸ்.ஐ. மும்தாஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
திருச்சி தில்லைநகரில் உள்ள சுந்தரேசன் என்ற டாக்டரிடம் லேப் அசிஸ்டெண்ட்டாக பணிபுரியும் விஜயராகவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
திருச்சி சென்னை பைபாஸ் ரோட்டில் உள்ள மருத்துவ கல்லூரி லேப்பில் உள்ள சிசுக்கள் உள்ள டப்பாவை, மருத்துவ கல்லூரி நிர்வாகம் அழிக்க சொன்னது. போலீஸ் அனுமதியுடன் இதனை செய்திருக்க வேண்டும். ஆனால் போலீஸ் அனுமதியில்லாமல் செய்துவிட்டதாக விஜய ராகவன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்..
No comments:
Post a Comment