இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கையெழுத்து இயக்கத்தை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்து பேசினார்.
அவ்போது அவர், ’’2009-ம் ஆண்டு இலங்கையில் ராஜபக்சேவால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஐ.நா.சபை மற்றும் அமெரிக்க குழு இதனை சர்வதேச போர் குற்றம் என அறிவித்துள்ளது.
இதற்காக அமெரிக்க இலங்கைக்கு அளித்து வந்த நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது வரவேற்கதக்கது.
இலங்கையில் தமிழ் ஈழ அரசு அமைய வேண்டும் என வலியுறுத்தி ருத்திரகுமார் தலைமையில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்க களப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் ஈழ அமைப்பை சேர்ந்த தயாபரன் என்னை தொடர்பு கொண்டு இந்த இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
சர்வதேச கோர்ட்டில் ராஜபக்சேவை நிறுத்த வேண்டும், தனி ஈழநாடு அமைய வேண்டும் என்பதற்காக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் விடுதலை சிறுத்தை கட்சி இறங்கி உள்ளது.
கடந்த 12-ந் தேதி முதல் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு வருகிற 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. இலங்கை தமிழர்களுக்காக இங்குள்ள தமிழர்கள் துப்பாக்கியை தூக்க வேண்டாம். கையெழுத்திட்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்’’ என்று பேசினார்.
No comments:
Post a Comment