திமுக மதுரை மாவட்ட செயலாளரும், மு.க.அழகிரிக்கு நெருக்கமானவருமான தளபதி, நில அபரிப்பு புகாரில் கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரின் தம்பி கோ. பிரபு, சிறுநீரக பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அண்ணன் கைது செய்யப்பட்டதை கேள்வி பட்டதும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் நேற்று மதியம் சென்னை அப்பல்லோவில் இருந்து மதுரை அப்பல்லோவிற்கு மாற்றப்பட்டார். இன்று இரவு 9 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இவருக்கு அஞ்சலி செலுத்த போலீஸ் காவலுடன் தளபதிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நாளை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
தம்பிக்கு அஞ்சலி செலுத்த தளபதிக்கு கோர்ட் அனுமதி அளிக்குமா என்று மதுரை திமுகவினர் பதட்டத்துடன் எதிர் நோக்கியுள்ளனர்.
No comments:
Post a Comment