மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மகள் பாண்டிசெல்வி (வயது17). இவருக்கு 14 வயதில் திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் பாண்டிசெல்வி தன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் திருமங்கலத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த பூங்கோதையுடன் பழக்கம் ஏற்பட்டது. பாண்டிசெல்வி அழகாக இருந்ததால் பூங்கோதையின் தாயார் அவரை விபசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டார்.
பின்னர் அவர் பாண்டி செல்வியிடம் ஆசைவார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தினர். அவர் மறுக்கவே அவரை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
மதுரை, திருச்சி, கோவை, ராமநாதபுரம், ராமேசுவரம் போன்ற இடங்களில் பாண்டிச்செல்வியை அடைத்து வைத்து அவரது கற்பை பலர் சூறையாடினர். சுமார் 2 ஆண்டுகாலமாக அறையில் அடைத்து வைத்து கற்பழித்துள்ளனர். பின்னர் பாண்டிசெல்வி அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
திருமங்கலம் கப்பலூரை சேர்ந்த பாண்டிசெல்வியின் தோழியின் தாயார், கீழக்குயில்குடி சத்யா, திருப்பரங்குன்றம் செல்வி, திருமங்கலம் சந்திரா, மதுரை கலைச்செல்வி, அவருடைய கணவர் சதீஷ், காரைக்குடி டி.கே.நகர் ருக்மணி, ராமேசுவரம் இளங்கோ, அய்யர், ராமேசுவரம் நகர சபைத்தலைவர் அப்துல் ஜலீல், சாத்தான்குளம் சேக், ராமநாதபுரம் ஆனந்தா, மதுரை ஆட்டோ டிரைவர் பாண்டி, ராஜேந்திரன் ஆகிய 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 366 (ஏ), 376 ஆகிய பிரிவுகளின் கீழ் (ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடு படுத்துதல், விருப்பத்திற்கு மாறாக கடத்தி மிரட்டி உடலுறவு கொள்ளுதல், பணம் சம்பாதிக்கும் நோக்கில் விபசாரத்தில் ஈடுபடுத்துதல்) போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பாண்டிசெல்வியிடம் நடத்திய விசாரணையில் அவரை வலுக்கட்டாயமாக அறையில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், விலை உயர்ந்த சொத்துக்களை தருவதாகவும் ஆசைகாட்டி கற்பழித்ததாகவும் கூறினார்.
தன்னைப்போலவே ஆந்திராவை சேர்ந்த பல மைனர் பெண்களை கற்பழித்த இந்த கும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதுதவிர மேலும் பல அரசியல் முக்கிய பிரமுகர்களும், தொழில் அதிபர்களும் தன்னை சீரழித்ததாகவும், அவர்களை அடையாளம் காட்டப் போவதாகவும் தெரிவித்தார்.
அதன்பின்னர் பாண்டிசெல்வியை ராமநாதபுரம் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி பாஸ்கர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து இன்று பாண்டிசெல்வியை போலீசார் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். அங்கு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ஜமுனாராணி மற்றும் டாக்டர்கள் பாண்டி செல்விக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர்.
No comments:
Post a Comment