ஒசாமா பின்லேடனை இழந்து தவித்து வரும் அல் கொய்தா அமைப்பு விரைவில் சுக்கல் சுக்கலாக சிதறப் போகிறது என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி..
ஒசாமா பின்லேடனின் மரணம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்தபடி அமெரிக்கப் படையினர் நடத்தி வரும் தொடர் ஏவுகணைத் தாக்குதல் போன்றவை அல் கொய்தா அமைப்பை நிலை குலைய வைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த அமைப்பு உடைந்து சிதறவும் பெரும் உதவியாக அமைந்துள்ளது.
தற்போது அல் கொய்தா அமைப்பு பல துண்டுகளாக சிதறிப் போகும் நிலையை எட்டி விட்டது. விரைவில் அது நடக்கப் போகிறது.
உலகளாவிய அளவில் அமெரிக்க உளவுப்படையினர் நடத்திய ஆய்வில், தற்போது பாகிஸ்தானில் இருந்தபடி செயல்பட்டு வரும் அல் கொய்தா அமைப்பினர் விரைவில் சிதறிப் போகும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இருப்பினும் அல் கொய்தாவின் மறைவால், தீவிரவாதம் அகன்று விடப் போவதில்லை. பல்வேறு தனிப்பட்ட நபர்கள் சிறு சிறு குழுக்களை ஏற்படுத்தி செயல்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தற்போது அல் கொய்தாவுக்கு அடுத்தபடியாக பெரும் மிரட்டலாக உருவெடுத்து வருகிறது ஏமனில் இருந்தபடி செயல்பட்டு வரும் அந்த அமைப்பின் கிளை. இந்த அமைப்பையும் ஒடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது வரும் காலத்தில் பெரும் மிரட்டலாகவும், ஆபத்தாகவும் உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
பின்லேடன் மரணமே அல் கொய்தா அமைப்பு சுருங்கிப் போகவும், செயலிழந்து போகவும் முக்கியக் காரணம். அந்த வகையில் பின்லேடன் மரணம் பெரும் திருப்புமுனையாகும்,. மேலும் பின்லேடனைப் போன்ற ஒரு கவர்ச்சிகரமான தலைவர் அல் கொய்தாவிடம் இல்லை என்பதாலும் அந்த அமைப்பு கரையத் தொடங்கி விட்டது என்று அந்த செய்தி கூறுகிறது.

No comments:
Post a Comment