மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ், சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. தற்போது, அவர் மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டார்.
அப்போது, உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள், அவருக்கு கைராட்டையால் நூற்கப்பட்ட துணியை பரிசாக அளித்தனர். அதை பெற்றுக்கொண்டு மேடையில் நாற்காலியில் அமர்ந்த ஜெய்ராம் ரமேஷ், அங்கிருந்த மேஜையில் அந்த துணியை வைத்தார்.
பின்னர் சற்று நேரம் கழித்து, அந்த துணியால் தனது ஷூவை துடைத்தார். அவரது செயல், மகாத்மா காந்தியின் கதர் பிரசாரத்தை அவமதிக்கக்கூடியது என்று எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பி உள்ளன. காங்கிரஸ் கட்சியும் ஜெய்ராம் ரமேஷ் மீது அதிருப்தி தெரிவித்துள்ளது.
நாட்டின் வரலாற்றை உணர்த்தக்கூடிய சில முக்கிய அடையாளங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் அந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்' என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment