நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்கு திரைப்பட இயக்குனரும், லட்சிய தி.மு.க. தலைவருமான விஜய டி. ராஜேந்தர் வந்தார். திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஈழத்தமிழர் பிரச்சினைக்காக அமைச்சர் பதவிக்கு நிகரான தமிழ்நாடு சிறுசேமிப்பு துறை துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்.
இதைப்போல அன்றைய ஆட்சியாளர்கள் பதவியை துறக்க முன்வந்திருந்தால் நிச்சயமாக ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம்.
தமிழ் உணர்வு மங்கிவிட்டதா? பின்தங்கிவிட்டதா? என்ற கேள்வி தான் என் மனதில் எழுந்துள்ளது. பதவிக்காக மட்டும் வாழக்கூடாது. மக்கள் பணி மட்டுமே எங்கள் பணியாகும் என்றார்.
No comments:
Post a Comment