நடிகர் அஜீத் கடந்த ஆட்சியில் நடந்த திரையுலக விழாயொன்றில் பேசும்போது நடிகர்- நடிகைகளை கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் அரசியல் மற்றும் பொது விழாக்களுக்கு அழைக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார். அவர் பேச்சு சர்ச்சையை கிளப்பியது. சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது அவர் கருத்துக்கு ஆதரவான நடவடிக்கைகள் திரையுலகில் நடக்கின்றன.
இதுபற்றி அஜீத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நம்முடைய அரசியல் முறை மற்றும் ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. சினிமாவில் இருக்கும் சிலரின் செயல்பாடுகள் எனக்கு மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்தியதால் அப்போது சில கருத்துக்களை வெளியிட்டேன். அந்த நபர்கள் திரையுலகில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தவோ அல்லது எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவதற்காகவோ இது போன்ற ஸ்டண்ட்களில் ஈடுபடுகின்றனர்.
நான் வெளியாட்களை பற்றி பேசவில்லை. சினிமாவில் இருக்கும் சிலர் செய்கின்ற காரியங்களைத்தான் சுட்டிக் காட்டினேன். சினிமாவில் அரசியலை கலக்கக்கூடாது. எனது கருத்தை ஆதரித்தால் பாதிக்கப்படுவோம் என அப்போது பயந்தனர். அதனால் பேசாமல் இருந்தார்கள்.
நடிகர்களுக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. இனம், மொழியை கடந்து அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்களாக இருக்கிறார்கள். சினிமா மூலம் மக்களை சந்தோஷப்படுத்துவதே நடிகர்கள் இலக்காக இருக்க வேண்டும்.
மங்காத்தா படத்தில் மிகவும் கெட்டவனாக நடித்துள்ளேன். மற்ற நடிகர்கள் போல் நான் அதிக படங்களில் நடிக்காத காரணம் என் வாழ்க்கையை நான் சந்தோஷமாக வாழ விரும்புகிறேன்.
No comments:
Post a Comment