தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார் குடியில் இன்று இரவு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை சென்றார். அங்கிருந்து அவர் திருவாரூக்கு காரில் சென்றார். திருவாரூர் மாவட்ட எல்லையான திருத்துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னுமிடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டிருந்தனர்.
மு.க.ஸ்டாலின் வந்ததும் அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து வந்தனர். நேற்று சமச்சீர் கல்வியை எதிர்த்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியபோது பள்ளியில் இருந்து மாணவர்கள் பஸ்சில் திரும்பியபோது கொரடச்சேரி அருகே பஸ் கவிழ்ந்து விஜய் என்ற மாணவர் பலியானார்.
இதற்கு பூண்டி கலைவாணன்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் அவரை கைது செய்ய போலீசார் வந்திருந்தனர். இதற்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பூண்டி கலைவாணனை ஒப்படைக்க இயலாது என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன் மற்றும் விஜயன் எம்.பி. உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment