சட்டவிரோத சுரங்க விவகாரத்தில் முதல்வர் பதவி ஆட்டம் கண்டு வரும் நிலையில், 2ஜி விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவால் குற்றம் சாட்டப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் முதலில் பதவி விலக வேண்டும் என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.
லோக் ஆயுக்தாவின் அறிக்கையில் எதியூரப்பா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், தனது ஜாதி பலத்தை வைத்து பாஜக தலைமையை அவர் மிரட்டி வருவதால் முடிவெடுக்க முடியாமல் அந்தக் கட்சி திணறி வருகிறது.
நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் 2ஜி விவகாரத்தில் பிரதமர், ப.சிதம்பரத்துக்கு குறி வைக்க நினைக்கும் பாஜக முதலில் தனது சட்டையில் உள்ள அழுக்கை துடைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து எதியூரப்பாவை பதவி விலகுமாறு கெஞ்சி வருகிறது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய எதியூரப்பா, தொலைத்தொடர்பு ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் முதலில் பதவிவிலக வேண்டும்.
ராசா நேரடியாகக் கூறியுள்ளதால் பிரதமரும், உள்துறை அமைச்சரும் முதலில் பதவி விலக வேண்டும். அவர்கள் பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை.
மத்திய அரசின் ஊழல்களை மறைக்கவே கர்நாடக விவகாரத்தை காங்கிரஸ் எடுத்துக் கொண்டுள்ளது என்றார்.
இதற்கிடையே கர்நாடக லோக்ஆயுக்தாவின் அறிக்கை குறித்து விவாதிக்க பாஜக உயர்மட்டக் குழு நாளை கூட உள்ளதாகத் தெரிகிறது. அதில் எதியூரப்பாவை பதவி விலக வைக்க அந்தக் கட்சி முடிவெடுக்கலாம் என்று தெரிகிறது.
பாஜக அரசின் கொள்கையை ராசா துளியும் கடைபிடிக்கவில்லை-அருண்ஷோரி:
இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வகுக்கப்பட்ட கொள்கையை ராசா துளியும் கடைப்பிடிக்கவில்லை என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அருண் ஷோரி கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய முந்தைய பாஜக கூட்டணி அரசு என்ன கொள்கையை கடைப்பிடித்ததோ, அதையே நானும் பின்பற்றினேன் என்று ராசா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதை மறுத்து அருண் ஷோரி கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் பிரதமர் மன் மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகியோருக்கு தெரியும் என்று ராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து பார்த்தால், ராசா சொல்வது உண்மை என்பது தெரிய வரும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை பெற்ற சில நிறுவனங்கள் தனது பங்குகளை மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தன. உரிமங்களை அல்ல. வெளிநாட்டு முதலீடுகளை கவரவே பங்குகள் விற்கப்பட்டன. இதில் அரசின் கொள்கைகள் மீறப்படவில்லை என்று மத்திய அரசு வக்காலத்து வாங்கியுள்ளது.
மத்திய அரசின் பங்குகள் விற்பனை கொள்கையை பின்பற்றியே, தனியார் நிறுவனங்கள் தனது பங்குகளை விற்றன என்றாலும், அந்நிய செலாவணி நிர்வாக சட்டத்தை (பெமா) மீறியதாக எடிசலாப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் ஏன் அனுப்ப வேண்டும்?.
இதற்காக அந்த நிறுவனத்துக்கு ரூ.7,100 கோடி அபராதம் விதிப்பதாக ஏன் தெரிவிக்க வேண்டும்?.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளன. பல விஷயங்கள் வெளியே வராமல் தடுக்க முயற்சிகள் நடந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வகுத்த கொள்கையையே தான் கடைப்பிடித்ததாக ராசா கூறியுள்ளது முற்றிலும் பொய். நாங்கள் வகுத்த கொள்கை, நடைமுறை எதையும் அவர் துளியளவு கூட பின்பற்றவில்லை. இதை ஆவணங்கள் வாயிலாக என்னால் நிரூபிக்க முடியும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு வந்த முந்தைய விண்ணப்பங்களை நிராகரித்துள்ளார். ராசாவின் மும்பை நண்பர்களுக்கு சொந்தமான ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் அவர் முடிவுகளை எடுத்தார் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிப்பதற்கு பதிலாக, சுருக்கியதுடன் 40 நிமிடங்களில் வங்கிகளின் டிடி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று காலக்கெடுவை நிர்ணயித்தார்.
இந்த அறிவிப்பை வெளியிடும் முன்பு தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களை தயார்படுத்திவிட்டார். இதன் மூலம் அவருக்கு வேண்டிய நிறுவனங்கள் மட்டுமே உரிமங்கள் பெற்று பலன் அடைந்தன என்றார் ஷோரி.

No comments:
Post a Comment