`தீராத விளையாட்டுப்பிள்ளை' திரைப்படத்துக்கான வெளியீட்டு உரிமை பெறும் பிரச்சினையில், சக்சேனா மீது கே.கே.நகர் போலீசில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிரச்சினைகளை கோர்ட்டுக்கு வெளியே தீர்த்துக் கொண்டதை அடுத்து, 2 வழக்குகளையும் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
அதுபோல், வல்லகோட்டை படத்தை தயாரித்த டி.டி.ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் சக்சேனா மீது பண மோசடி (ரூ.1.25 கோடி) மற்றும் கொலை மிரட்டல் குற்றத்தின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
`சிந்தனை செய்' என்ற படத்தின் தயாரிப்பாளர் அருள்மூர்த்தி கொடுத்த புகாரின் (ரூ.11 லட்சம் மோசடி) அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அவர் மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளிலும் சக்சேனா கைது செய்யப்பட்டார். இந்த 2 வழக்குகளிலும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். சக்சேனா தரப்பில் மூத்த வக்கீல் கே.எஸ்.தினகரன் ஆஜரானார். அரசுத் தரப்பில் குற்றவியல் தலைமை வக்கீல் ஐ.சுப்பிரமணியம் ஆஜரானார்.
இந்த மனுக்களை நீதிபதி பி.தேவதாஸ் விசாரித்தார். சக்சேனாவுக்கு ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். சக்சேனா மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் போலீசில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
சினிமா தயாரிப்பாளர் ஜபக் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோடம்பாக்கம் போலீசில் தொடரப்பட்ட வழக்கில் சக்சேனாவின் ஜாமீன் மனுவை முதன்மை செசன்சு கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த 2 வழக்குகளில் ஜாமீன் பெற்றிருந்தாலும், சக்சேனா தொடர்ந்து ஜெயிலில் அடைக்கப்படும் நிலை நீடிக்கிறது.
இதற்கிடையே, சக்சேனாவை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை பெருநகர 23-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று மாலை மாஜிஸ்திரேட்டு அகிலா ஷாலினி முன்பு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல்கள் கோபிநாத், மேரி ஜெயந்தி ஆகியோர் ஆஜராகி ஜாமீன் மனுவுக்கு பதில் தாக்கல் செய்ய 2 நாள் கால அவகாசம் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அரசு தரப்பு வக்கீல் கோபிநாத், ``சக்சேனா மீதான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்படுகின்றன. இதனால் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்'' என்றார். இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று (புதன்கிழமை) பிற்பகலுக்கு மாஜிஸ்திரேட்டு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment