அதிமுக கட்சியின் கூட்டணியை பெறுவதற்காக, உளறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு, இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும், என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் அமைச்சர் ராசா மீதுள்ள குற்றசாட்டுகளுக்கு பிரதமரும், சோனியா காந்தியும் பதிலளித்து, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக, தேர்தலுக்கு முன் முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் இப்போது அவர்கள் இருவரும் பதலளிக்க வேண்டும் என ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
அதிமுகவுடன் ஏற்படும் உறவை எதிர்நோக்கியவாறு, வாய்க்கு வந்தபடி உளறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
தென்சென்னை திமுக மாவட்டச் செயலர் அன்பழகன் மீது, புகார் கொடுத்தவர் 2009ம் ஆண்டில் நஷ்டமடைந்த பல மில்களை வாங்கி, போலி ஆவணங்கள் தயாரித்து 250 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர். அவரும் அவரது நண்பரும் மோசடி வழக்கில் கைதாகி, அந்த வழக்கு சி.பி.ஐ.,விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
திருவாரூரில் லாரி-பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் இறந்ததற்கு திமுக மாவட்டச் செயலர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அதற்குரிய ஆவணங்களை காட்டாததற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஸ்டாலினையும் கைது செய்து விடுவித்தனர். ஸ்டாலின் கைதானதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால், அவரை கைது செய்யவே இல்லை என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்நிலையில், அன்பழகன் மற்றும் திமுகவினர் மீது வழக்குகள் பதிவு செய்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என, முதல்வர் பேட்டியில் கூறியுள்ளார்.
ஸ்டாலின் கைது செய்தது, சரியான நடவடிக்கை அல்ல என, அதிமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே கூறியது. இதன்மூலம் ஆளுங்கட்சிக்கு இரண்டொரு ஆண்டுகளில் வரக்கூடிய கெட்ட பெயர் அதிமுக ஆட்சிக்கு இரண்டொரு மாதங்களிலேயே வந்துள்ளது.
தமிழில் பெயர் சூட்டிய சினிமாக்களுக்கு, திமுக ஆட்சியில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. பொதுத் தேர்தலில் திரைத் துறையினர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதற்கு நன்றி கடனாகத்தான் வன்முறை, ஆபாச படங்களுக்கு வரி விலக்கு இல்லை என்று ஆளுங்கட்சி அறிவித்துள்ளது.
இதன்மூலம், தங்களுக்கு வேண்டாதவர் எடுக்கும் படங்களுக்கு வரி விலக்கு இல்லை என மறுக்க முடியும். அதிமுக ஆட்சிக்கு "சலாம்' போடவில்லை என்றால் இனி வரிவிலக்கு கிடையாது.
இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment