தமிழகத்தில் உள்ள ஜாதிப் பெயர்களை, குறிப்பாக பல கிராமங்களில் உள்ள ஊர்களின் ஜாதிப் பெயர்களை நீக்கி விட்டு அவற்றுக்குப் பதில் நல்ல தமிழப் பெயர்களை சூட்ட அரசு முடிவு செய்துள்ளது.
ஜாதி ஒழிய வேண்டும், மதச்சார்பு அழிய வேண்டும் என்று என்னதான் நாம் குரல் கொடுத்து வந்தாலும், இன்னும் ஜாதிகளை நம்மால் ஒழிக்க முடியவில்லை. அரசியல்வாதிகளே தேர்தல் சமயத்தில் ஜாதிகளை நம்பித்தான் பிழைப்பு நடத்துகின்றனர்.
இந்த நிலையில் ஊர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக கிராமங்களில் இந்த நடவடிக்கை தொடங்கவுள்ளது.
அந்தந்த கிராம அளவில் ஊராட்சி தலைவர், தலைமை ஆசிரியர், பிரமுகர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும். இக்குழுவினர் ஊரின் பெயரை மாற்ற, கிராமத்தினரிடம் கருத்து கேட்பர். பெயர்கள் கலெக்டர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டு, அரசு கெஜட்டில் வெளியிடப்படும். முதற்கட்டமாக, ஜாதியின் பெயரில் உள்ள ஊர்களின் பட்டியலை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது அரசு.
ஏற்கனவே முன்பு சென்னை நகரில் உள்ள தெருக்களின் பெயர்களில் இருந்த ஜாதிகளை நீக்கியது தமிழக அரசு என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தமிழக அளவில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment