தனது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளரும் கோத்தபய ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர் கோத்தபய. புலிகளை முறியடிப்பதாகக் கூறிக் கொண்டு ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இவரை பிரதமராக்க ராஜபக்சே முயல்வதாகத் தெரிகிறது. விரைவில் செய்யப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது அவரை பிரதமராக்கிவிட ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து இலங்கை அரசில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான பௌத்த பிக்குகளிடம் ராஜபக்சே ஆலோசனை நடத்தியுள்ளார்.
போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை மீது சுமத்தப்படும் சர்வதேச குற்றச்சாட்டுக்களை சமாளிக்க வசதியாக கோத்தபயவை பிரதமராக்க முயல்வதாகத் தெரிகிறது.
மேலும் கோத்தபயவுக்கு முக்கிய பொறுப்பு தர வேண்டும் என ராஜபக்சே குடும்பத்திற்குள்ளும் நெருக்குதல் தரப்பட்டு வருவதும் குறிப்பிடதக்கது.
யார் பிரதமராவது என்பதில் பசிலுக்கும் கோத்தபயவுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. ஆனால், பிரதமர் பதவியை எதிர்பார்த்துள்ள பசில் ராஜபக்சவை அந்தப் பதவிக்கு நியமித்தால் தான் நாட்டைவிட்டு வெளியேறுவேன் என்று மஹிந்த ராஜபக்சே தனது குடும்பத்தாரை எச்சரித்துள்ளதாகவும் தெரிகிறது
எல்லாவற்றுக்கும் இந்தியாவிடம் ஓட வேண்டுமா?- கே.பி.:
இந் நிலையில் எல்லா விவகாரங்களுக்கும் இந்தியாவிடம் ஓடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே பி என்ற குமரன் பத்மநாதன் இலங்கை அரசுக்கு யோசனை கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், இரு இனங்களுக்கு இடையிலான பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். எல்லாத் தேவைகளுக்கும் இந்தியாவிடம் செல்லக் கூடாது. இந்திய தலையீடு குறித்து பெரும்பான்மையான இலங்கை மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
10 கோடி சிங்கள மக்கள் மீது 6 கோடி தமிழக மக்களின் நெருக்கடி உள்ளதாக இலங்கை மக்கள் கருதுகின்றனர். இந்த அச்சத்திற்கு நாம் எண்ணெய் ஊற்றக் கூடாது, சிறு விஷயங்களுக்கு எல்லாம் இந்தியாவிடம் ஓடக் கூடாது.
இந்த விஷயத்தை பொறுப்பு வாய்ந்த நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தின் வை.கோ, சீமான் போன்றவர்களின் ஆக்ரோசமான உரைகள் மக்களை திசைதிருப்பக் கூடும்.என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment