ஜன்லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி கடந்த 16ம் தேதி துவங்கிய உண்ணவிரதம் இன்றுடன் 10 வது நாளை தொட்டிருக்கிறது.
இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட அரசு 3 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.
1. மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏற்படுத்துவது குறித்து பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும்.
2. ஜன்லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்து, அதன் மீது விவாதத்தைத் தொடங்க வேண்டும்.
3. கீழ்மட்ட அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
இந்த 3 நிபந்னைகளையும் அரசு ஏற்கும் பட்சத்தில் உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வரும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment