இலங்கையில் போர் முடிந்து விட்ட பிறகும், தொடர்ந்து தமிழர்களை சித்திரவதை செய்து குற்றவியல் நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது அந்த நாட்டு அரசு என்று கூறியுள்ளார் அதிமுக லோக்சபா குழுத் தலைவர் தம்பித்துரை.
லோக்சபாவில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு தம்பித்துரை பேசுகையில், இந்தியா அளித்த, அளித்து வரும் எந்த உதவியுமே அப்பாவித் தமிழ் மக்களுக்குப் போய்ச் சேரவே இல்லை என்பதே உண்மை. இது கடும் கண்டனத்துக்குரியது.
இலங்கைப் படையினரும், அரசும், தமிழர்கள் விவகாரத்தில் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து வருகின்றனர். மனிதாபிமானமே இல்லாத வகையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
போர் முடிந்து விட்ட பிறகும் கூட இலங்கை ராணுவம் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதைத் தடுக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்றார் தம்பித்துரை.
தென்காசி எம்.பி. லிங்கம்
தென்காசி தொகுதி கம்யூனிஸ்ட் எம்.பி. லிங்கம் பேசுகையில், ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது இலங்கைப் படைகள். இருந்தும் இந்தியா இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய அரசு இதில் தயக்கம் காட்டுவது ஏன் என்றார் அவர்.
ஜஸ்வந்த் சிங்
பாஜக உறுப்பினர் ஜஸ்வந்த் சிங் பேசுகையில்,
இலங்கையில் தமிழர்கள் மொழி சிறுபான்மையினர் என்பது மட்டுமல்ல, இன ரீதியாகவும் சிறுபான்மையினர் என்பதால், உரிய மரியாதை தரப்படவேண்டும். தேவையான வசதிகளைச் செய்து தரவேண்டும். இன அடிப்படையில் தமிழர்களுக்கு உரிய மரியாதையை இலங்கை அரசு தரவேண்டும்.
இலங்கைப் பிரச்னை விவகாரத்தில், தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்கத்தக்கது. மாநில அரசு இயற்றும் தீர்மானத்தில் யாரும் தலையிட முடியாது.
கச்சத்தீவில் தமிழர்கள் மீன்பிடிப்பதை தடுக்க இலங்கை அரசுக்கு உரிமையில்லை என்றார்.

No comments:
Post a Comment