மதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் 11.08.2011 அன்று ஒரு வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முத்தன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜானார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் நடைபெற்ற ஒரு பொது கூட்டத்தில் நான் ஜெயலலிதாவை பற்றி பேசியதற்காக என் மீது அவதூறு வழக்கு போட்ப்பட்டது. அந்த வழக்கிறாக நான் நீதிமன்றித்தில் இன்று ஆஜரானேன்.
9 ஆண்டுகலாக இந்த வழக்கு நடைபெற்று வருகின்றது. வழக்கு விசாரனை தொடங்குவதில் அதிமுக அரசம் கவலைபடவில்லை நானும் கவலைப்படவிலலை.
மதிமுக தன்னுடைய அரசியல் பயனத்தில் ஒரு புதிய இலக்கை நோக்கி சிறகுகளை விரித்து பறக்க தொடங்கியுள்ளது. 7 ஆண்டு காலம் அதிமுகவுக்கு பல்லக்கு தூக்கியதால் அவர்கள் எங்கள் உழைப்பை உள்வாங்கி கொண்டு ஒரு தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக எங்களை நம்ப வைத்து கழுத்தறுத்த நயவஞ்சகம் புரிந்தனர். ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலை சந்திப்பதற்கு வாய்பில்லாமல் ஒரு கட்சி இருக்குமானால் அந்த கட்சி காணாமல் போய் விடும்.
ஆனால் மதிமுக தேர்தலுக்காக ஜெயலலிதா போடுகின்ற பிச்சையை ஏற்க முடியாமல் சுயமரியததையும், தன்பிக்கையும் விட்டு கொடுக்காமல் தேர்தலை புற்ககணிப்பது என்று துணிந்து எடுத்த முடிவால் மக்கள் மத்தியில் இன்று மதிமுகவிற்கு மரியாதை கிடைத்துள்ளது.
ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. ஜெயலலிதா அரசு இழைக்கின்ற தவறுகளை கேள்வி கேட்பதற்கு தமிழகத்தில் இன்று எதிர்கட்சிகள் இல்லை. இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.

No comments:
Post a Comment