சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சுற்றி வந்த சிங்களர்களை சரமாரியாக சிலர் அடித்து உதைத்தனர். இதுதொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எலிபித்தியா என்ற பகுதியைச் சேர்ந்த 83 சிங்களர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஜூலை 17ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தனர். ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை திரும்புவதாக இருந்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து வேப்பேரியில் தங்கி்யிருந்தனர்.
அப்போது இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சாலையில் சுற்றியுள்ளனர். இதைப் பார்த்த சிலர் அவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த சமயத்தில் கிட்டத்தட்ட 50 பேர் திரண்டு வந்து அந்த சிங்களர்கள் தங்கியிருந்த விடுதிக்குள்ளும் புகுந்து சரமாரியாக தாக்கினர். இதில் சில சிங்களர்கள் காயமடைந்தனர்.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேரைப் பிடித்தனர். பின்னர் அவர்கள் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் தாக்குதலைத் தொடர்ந்து சிங்களர்கள் பெரும் பீதியடைந்தனர். உடனடியாக அவர்களை வேறு ஒரு ஹோட்டலுக்கு இலங்கை துணைத் தூதரக அதிகாரிகள் இடமாற்றினர். அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment