திராவிட கட்சிகளோடு, இனி கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டேன் என்பதை நிரூபிக்க தீக்குளிக்கவும் தயார் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
விழுப்புரத்தில் நேற்று மாலை நடந்த பா.ம.க., பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "இனி திராவிட மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று முடிவு செய்துள்ளோம்.
திராவிடன் என்று கூறி ஏமாற்றிக் கொண்டது போதும். இனி திராவிடன் என்ற முத்திரை வேண்டாம். தமிழனாக இருப்போம். அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்றனர். அந்தக் கொள்கையை, சுடுகாட்டுக்கு அனுப்பியது தான் மிச்சம்.
மானாட மயிலாட பார்க்க, கட்சிக்கு ஒரு டிவி துவக்கியவர்கள்தான் திராவிடக் கட்சியினர். இவர்கள் ஆட்சியில் சினிமா, அரசியல் காரணமாக சீரழிவுகள்தான் அதிகம்.
நீங்களும் திராவிட கட்சிகளிடம், கூட்டணி வைத்தீர்களே என கேட்கிறார்கள். கூட்டணியில் இருந்த, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நான்கு ஆண்டுகளும் எதிர்க்கட்சியாகவே இருந்து, எதிர்த்து கேள்வி கேட்டோம். தி.மு.க.,வினர் கூட பயந்த காலத்தில் துணிந்து நின்றவர்கள் நாம்தான். தி.மு.க., ஆட்சியில், நாம் கொடுத்த தொல்லை தாங்காமல் கருணாநிதி தொலைந்து போ என்றதால் வெளியேறினோம்.
தனித்து நிற்க நல்ல முடிவெடுத்துள்ளீர்கள், உறுதியாக இருப்பீர்களா என்று கேட்கின்றனர். உறுதியாக இருப்போம் என்று நிரூபிக்க, தீக்குளிக்கணுமா, இல்லை எங்கிருந்தாவது குதிக்கனுமா, சொல்லுங்க... நான் தயார். இவர்களிடம், இனி எக்காலத்திலும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை... போதுமா!", என்றார்.

No comments:
Post a Comment