இலங்கை அதிபர் ராஜபக்ச நான்கு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார் அங்கு சீனா அதிபர் வென் ஜியாபோவை சந்தித்து பேசினார் அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும் . ஆழ்ந்த பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீனா உறுதுணையாக இருக்கும் என வென் தெரிவித்தார் .
இலங்கைக்கு சீனா அளித்து வரும் மதிப்புமிக்க நீண்ட கால ஆதரவு பாரட்டதர்க்குரியது என ராஜபக்ச கூறினார் .
இதனை தொடர்ந்து மனித உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக சர்வதேச நெருக்கடி எழுந்தால் அதை எதிர்கொள்ள சீனா முழு ஆதரவு அளிக்கும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் கொழும்பில் தெரிவித்தார். அப்போது, சீன அதிபர் வென் ஜியாபோ இந்த வாக்குறுதியை அளித்ததாக அவர் மேலும் கூறினார்.

No comments:
Post a Comment