முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது என்று அந்நாட்டு தமிழ் இணையதளங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் செல்லும் வழியில் உள்ள காட்டுக்குள் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் வீடு உள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் சாதாரணமாக காட்சியளிக்கும் அந்த வீட்டுக்குள் பல பதுங்குகுழிகள் உள்ளன. ஒவ்வொரு பதுங்குகுழிப் பாதைக்கும் இரும்புக் கதவுகள் உள்ளன.
பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறியதிலிருந்து இந்த வீட்டிற்கு ஏராளமான தென் இலங்கையர்கள், போலீசார், ராணுவத்தினர் ஆகியோர் வந்து செல்கின்றனர். இந்த வீட்டைத்தான் தற்போது சுற்றுத்தலமாக்க இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

No comments:
Post a Comment