மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான மதுரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள தயா வலைதள பூங்கா நிறுவன மேலாளர் மணிகண்டன ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ’’வலைதளபூங்காவில் அழகிரி, காந்தி அழகிரி, துரைதயாநிதி மூவரும் இயக்குநர்களாக இருக்கின்றன்ர். தொழிலதிபர் மார்ட்டினிடம் 3 ஏக்கர் 18 செண்ட் மற்றும் 78 செண்ட் நிலத்தை 2010ல் 85 லட்சத்திற்கு முறையாக பத்திரப்பதிவு செய்து நிலத்தை வாங்கியிருக்கிறோம்.
அந்த இடம் நாகேந்திர அய்யர், நாகேந்திர பூஜை வகையறா அறக்கட்டளைக்கு சொந்தமாக இருந்தது. இந்த இடம் விவசாயத்திற்கு உதவாது என்று கூறி மார்ட்டினிடம் விற்றுள்ளனர். அவரிடம் இருந்து நாங்கள் முறையாக கிரயம் செய்துள்ளோம்.
இந்நிலையில் போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்தை நாங்கள் மோசடி செய்து அபகரித்துவிட்டோம் என்று பொய்ப்புகார் கூறுகின்றனர். இதனால் எங்களை விசாரித்து வருகின்றனர்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீது நீதிபதி சுதாகரன் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப்பின்னர், 9 வருடங்களுக்கு முன்பு முறையாக வாங்கியிருக்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த தொந்தரவுகளை கொடுப்பதாக தெரியவருகிறது.
எனவே விசாரணைக்கு இந்த நீதிமன்றம் இடைக்காலத்தடை விதிக்கிறது. இது சம்பந்தமாக ஏதும் புகார் இருந்தால் டிஜிபி மூலமாக அதை கோர்ட்டுக்கு தெரிவியுங்கள். யூகத்தின் அடிப்படையில் நடவடிக்கை ஏதும் எடுக்காதீர்கள் என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார் நீதிபதி.
No comments:
Post a Comment